குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது.
குஜராத் சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி நேர பரப்புரை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட முதல் கட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாலையுடன் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.