கனடா - இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் குத்திக் கொலை

March 8, 2024

கனடா நாட்டில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடா தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள பார்கேவன் பகுதியில், இலங்கையை சேர்ந்த தர்ஷினி என்பவர், கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று, அவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்த போது, […]

கனடா நாட்டில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கனடா தலைநகர் ஒட்டாவா அருகே உள்ள பார்கேவன் பகுதியில், இலங்கையை சேர்ந்த தர்ஷினி என்பவர், கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று, அவர்கள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்த போது, தர்ஷினி, அவரது 4 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். தர்ஷினியின் கணவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர கொலை சம்பவத்தில், 19 வயதான சொய்டா என்ற மாணவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu