கடந்த 2022 ஆம் ஆண்டு, கனடா நாட்டில் புதிதாக 431645 புதிய குடியேற்றங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கனடா நாட்டில் பதிவான குடியேற்ற அளவுகளில் வரலாற்று உச்சம் ஆகும்.
கனடா நாட்டின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில், கனடா நாட்டில் புதிதாக குடியேற, குடியுரிமை பெற 5.2 மில்லியன் விண்ணப்பங்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் விண்ணப்ப எண்ணிக்கையை விட 2 மடங்கு கூடுதல் ஆகும்.
கனடா நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியில் 75% புதிதாக குடியேறியவர்கள் மூலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில், 2036 ஆம் ஆண்டில், கனடா நாட்டின் 30% மக்கள் தொகை வெளிநாட்டிலிருந்து அங்கு குடி பெயர்ந்தவர்களாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.