இந்தியா கனடா நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் - ஜஸ்டின் ட்ரூடோ

June 7, 2024

கனடாவின் ஜனநாயகத்திற்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்ற நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததையடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே உறவில் சிக்கல் ஏற்பட்டது. கனடாவில் உள்ள இந்திய தூதரை அந்நாடு வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற சொன்னது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டது..கனடாவின் குற்றச்சாட்டிற்கு […]

கனடாவின் ஜனநாயகத்திற்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்ற நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததையடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே உறவில் சிக்கல் ஏற்பட்டது. கனடாவில் உள்ள இந்திய தூதரை அந்நாடு வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற சொன்னது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டது..கனடாவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய அச்சுறுத்தல் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் கூறியுள்ளார். அச்சுறுத்தல் தரும் முதல் வெளிநாடாக சீனா உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த ரஷ்யா தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பில் இருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu