கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவு மேலும் குறைக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக பிரதமர் ட்ரூடோ கூறியதற்குப் பின்பு, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களுக்கு 35% குறைவான அனுமதிகள் வழங்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு அது 10% க்கும் குறைவாக இருக்கும். 2023-ம் ஆண்டு 5.09 லட்சம் பேர் மற்றும் 2024-ம் ஆண்டு முதல் 7 மாதங்களில் 1.75 லட்சம் பேர் அனுமதி பெற்றுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளால் 2025-ம் ஆண்டு 4.37 லட்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களில் 40% இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.