அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 கவச வாகனங்கள் உக்ரைனுக்கு அளிக்கப்படும் - கனடா

September 23, 2023

கனடா அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 கவச வாகனங்களை உக்ரைனுக்கு தர உள்ளது.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கனடா நாடு செய்த உதவிகளை நினைவு கூர்ந்து அதற்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, நேட்டோ உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க […]

கனடா அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 கவச வாகனங்களை உக்ரைனுக்கு தர உள்ளது.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கனடா நாடு செய்த உதவிகளை நினைவு கூர்ந்து அதற்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, நேட்டோ உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். அடுத்த ஆண்டும் உக்ரைனுக்கு கனடா அரசு பொருளாதார உதவிகளை தொடர்ந்து வழங்கும். அதே சமயத்தில் உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் தேவைப்படாத வகையில் அங்கு அமைதியான சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் என்றார்.
கனடா அரசு புதிய ராணுவ உதவியை உக்ரைனுக்கு செய்ய உள்ளது அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 கவச வாகனங்களை உக்ரைனுக்கு தர உள்ளது. இந்த ராணுவ உதவி தொகுப்பின் மதிப்பு 650 மில்லியன் டாலர்கள் ஆகும். இதில் மருத்துவ உதவிகளும் அடங்கும். அதோடு 16 ரக போர் விமான விமானங்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்களும் உக்ரைனுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu