கனரா வங்கி லாபம் 92% உயர்வு

January 24, 2023

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் நிகர லாபம் கடந்த காலாண்டில் 92% உயர்ந்துள்ளதாக வங்கி வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 2882 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 1502 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், கனரா வங்கியின் வருவாய் 26218 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த மூன்று மாதங்களில் […]

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் நிகர லாபம் கடந்த காலாண்டில் 92% உயர்ந்துள்ளதாக வங்கி வெளியிட்டுள்ள மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 2882 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 1502 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், கனரா வங்கியின் வருவாய் 26218 கோடியாக பதிவாகியுள்ளது. வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த மூன்று மாதங்களில் 24% உயர்ந்து, 8600 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, 22231 கோடி மதிப்பில் வட்டி வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 7.8% ஆக இருந்த மொத்த வாராக் கடன், கடந்த காலாண்டில் 5.89% ஆக குறைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu