இன்று முதல் கனரா வங்கியின் பங்கு பிரிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்றைய வர்த்தகத்தில் கனரா வங்கி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது.
கனரா வங்கியின் நிர்வாகக் குழு, அதன் பங்குகளை 1:5 ரேஷியோவில் பிரிப்பதற்கு திட்டமிட்டு இருந்தது. இது, இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 10 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்குக்கு எதிராக, 2 ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இதனால், கனரா வங்கியில் அதிக சில்லறை முதலீடுகள் குவியும் என கருதப்படுகிறது. முன்னதாக, கனரா வங்கியின் காலாண்டு முடிவுகள் சாதகமான நிலையில் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த ஆண்டு கனரா வங்கியின் முதலீட்டாளர்களுக்கு 92% ரிட்டர்ன் கிடைத்துள்ளது. எனவே, இன்றைய பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு பெருகியுள்ளது.