கடன் பத்திர வெளியீடு - 8500 கோடி ரூபாய் நிதி திரட்டும் கனரா வங்கி

June 10, 2024

கனரா வங்கி, கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாக 8500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. பிரபல பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு 8500 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, பேசல் 3 விதிகளின்படி முதல் நிலை கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், 4000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. கனரா வங்கியின் நிர்வாகக் […]

கனரா வங்கி, கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாக 8500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

பிரபல பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, நடப்பு நிதியாண்டுக்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு 8500 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. அதன்படி, கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, பேசல் 3 விதிகளின்படி முதல் நிலை கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், 4000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. கனரா வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளனர். திரட்டப்படும் நிதி, வங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu