கேண்டிடேட் செஸ் போட்டி - பத்தாவது சுற்று டிரா

சென்னையை சேர்ந்த குகேஷ் மற்றும் ரஸ்ய வீரர் இயன் நெபோம்னியாச்சி விளையாடிய கேண்டிடேட் செஸ் போட்டியின் பத்தாவது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது. கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஐந்து வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரில் பத்தாவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த குகேஷ் மற்றும் […]

சென்னையை சேர்ந்த குகேஷ் மற்றும் ரஸ்ய வீரர் இயன் நெபோம்னியாச்சி விளையாடிய கேண்டிடேட் செஸ் போட்டியின் பத்தாவது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.

கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஐந்து வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரில் பத்தாவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த குகேஷ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த நெபோம்னியாச்சி மோதினர். இதில் 40வது காய் நகர்த்தலில் இந்த ஆட்டமானது டிராவில் முடிவடைந்தது. ஏற்கனவே இருவரும் இந்த தொடரில் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்திருந்தது. 10 சுற்றுகள் முடிவில் குகேஷ் மற்றும் நெபோம்னியாச்சி 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu