வடிவமைப்பு மற்றும் பதிப்பாக்கத்திற்கான பிரபலமான ஆன்லைன் தளமான கான்வா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லியோனார்டோ ஏஐ நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்தக் கையகப்படுத்துதல் மூலம், கான்வாவின் செயற்கை நுண்ணறிவு கருவித் தொகுப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கான்வா தற்போது 190 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. லியோனார்டோ ஏஐ 19 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தக் கையகப்படுத்துதல் மூலம், கான்வாவின் சந்தை விரிவாக்கம் பன்மடங்கு உயர்கிறது. கான்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், "லியோனார்டோ ஏஐயின் முன்னணி தொழில்நுட்பத்தையும், அவர்களின் ஃபீனிக்ஸ் அடிப்படை மாதிரியையும், எங்களது மேஜிக் ஸ்டுடியோ தயாரிப்புகளுடன் விரைவாக இணைக்க திட்டமிட்டுள்ளோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.