செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் லைபீரிய கொடியுடன் வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செங்கடல் பகுதியில் வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக தாக்குதல் எதுவும் நடத்தாமல் இருந்தனர். இந்நிலையில் செங்கடலில் லைபீரிய நாட்டின் கொடியுடன் ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தபோது அதன் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டுள்ள சூழலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடந்த சனியன்று இந்த சரக்கு கப்பல் செங்கடல் பகுதியில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்த தாக்குதலில் இந்த கப்பல் சேதம் அடைந்தது. எனினும் அதில் பயணத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கடல்சார் தகவல் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த கப்பல் சவுதி அரேபியாவுக்கு செல்ல வேண்டியது என்றும் அது தற்போது வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.