தூத்துக்குடி மாலத்தீவு இடையே அக்டோபர் 1 முதல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

September 4, 2024

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து மாலத்தீவுக்கு புதிய சரக்கு கப்பல் சேவை வரும் அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எச்.வி. கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இயக்குகிறது. முதல் கட்டமாக, ஏப்ரல் 2025 வரை 7 மாதங்களுக்கு கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இந்த கப்பல் போக்குவரத்து அமையும். வாராந்திர அடிப்படையில், குறைந்த செலவில் மற்றும் விரைவாக சரக்குகளை […]

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து மாலத்தீவுக்கு புதிய சரக்கு கப்பல் சேவை வரும் அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எச்.வி. கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இயக்குகிறது. முதல் கட்டமாக, ஏப்ரல் 2025 வரை 7 மாதங்களுக்கு கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இந்த கப்பல் போக்குவரத்து அமையும். வாராந்திர அடிப்படையில், குறைந்த செலவில் மற்றும் விரைவாக சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வசதியை வழங்கும். மாலத்தீவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு தேவையான கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள் போன்றவற்றை திறமையாக கொண்டு செல்ல உதவும். மாலத்தீவுக்கு உணவு பொருட்கள், காய்கறிகள், முட்டை, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல அனுமதிக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu