சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன, இதற்கிணங்க, சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் பணி புரியும் சுகாதாரப் பணியாளர்கள் 81 பேர், தங்களது பணியை நிரந்தமாக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தற்காலிக சுகாதார பணியாளர்கள் 3 ஆண்டுகள் பணியாற்றியதாகக் கூறியதை கொண்டு, நகராட்சி நிர்வாகம், 2019-ல் அரசாணையை பிறப்பித்து, 275 பேரின் பணியை நிரந்தரமாக்கியதையும், அதற்கேற்ப இந்த 81 பேரின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரமாக்க உத்தரவிடப்பட்டது.