கேரளாவில் மீன் பிடிக்க மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை

August 29, 2023

கேரளாவில் குறிப்பிட்ட வகை மீன் குஞ்சுகளை பிடிப்பதற்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளா கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி 58 வகை மீன் குஞ்சுகளை படிக்க தடை விதிக்கப்பட்டது. கடல் பகுதியில் மீன்கள் வரத்து குறைந்ததனால் இந்த தடை அமல்படுத்தப்பட்டது. தற்போது இதன் பலன்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கடுமையான […]

கேரளாவில் குறிப்பிட்ட வகை மீன் குஞ்சுகளை பிடிப்பதற்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளா கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி 58 வகை மீன் குஞ்சுகளை படிக்க தடை விதிக்கப்பட்டது. கடல் பகுதியில் மீன்கள் வரத்து குறைந்ததனால் இந்த தடை அமல்படுத்தப்பட்டது. தற்போது இதன் பலன்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கடுமையான தடை அமல்படுத்தியதன் மூலம் மீன் வரத்து கடந்த நிதியாண்டில் 6.9 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. எனவே இந்த மீன்பிடி தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட கேரள அரசு 58 வகை மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கான தடையை 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu