அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25% வரியை திங்கட்கிழமை முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இதற்கு சீனா மற்றும் யூரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யூரோப்பிய ஆணையம் தகுந்த பதிலடி அளிப்பதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், சீனாவும் $14 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க நிலக்கரி மற்றும் எல்என்ஜி இறக்குமதிக்கு […]
அமெரிக்க அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுத் துறை (DOGE), ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கில் ராஜ்பாலை தேசிய சமுத்திரவியல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) பிரதிநிதியாக நியமித்துள்ளது. DOGE மற்றும் NOAA இரண்டிலும் ராஜ்பாலுக்கு மின்னஞ்சல் முகவரிகள் உள்ளன. மேலும், அவர் NOAA-வின் அனைத்து கூகுள் தளங்களுக்கும் எடிட்டர் அனுமதியைப் பெற்றுள்ளார். இது சமீபத்திய பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க (DEI) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், எலான் […]
நேற்றிரவு, இஸ்ரேல் விமானப்படை லெபனானின் பெகா பகுதியில் உள்ள சுரங்க பாதையை இலக்காக வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. சிரியா-லெபனான் இடையை இணைக்கும் இந்த சுரங்கம் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கடத்தலுக்காக பயன்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்துகிறது. இதற்கு முன்பும் இந்த சுரங்கம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்கம் மறுபடியும் பயன்பாட்டுக்கு வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இஸ்ரேல் உறுதி கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஆயுதகளைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் தாக்குதலும் […]
மெக்ஸிகோவில் பேருந்து லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் 41 பேர் கருகி உயிரிழந்தனர். வடக்கு அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டின் குயிண்டினா ரோ மாகாணம், கான்கனில் இருந்து டபாஸ்கோ செல்லும் வழியில் பயணித்த பேருந்து, எஸ்கார்சிகா பகுதியில் லாரியுடன் மோதி தீப்பிடித்தது. 48 பயணிகளுடன் சென்ற பேருந்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டபோதும், 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுடன் உரையாடியதாக தெரிவித்தார். உக்ரைனில் நிலவும் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேசியதாக அவர் கூறினார். "போர்க்களத்தில் உயிரிழப்புகளை புதின் கவனத்தில் கொண்டு வருவார் என நம்புகிறேன். மக்கள் மரணம் அடைவதை நிறுத்த விரும்புகிறேன். 20 லட்சம் பேர் காரணமின்றி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இளமையான, அழகானவர்கள், உங்கள் குழந்தைகளை போன்றவர்கள்," என்றார். புதினுடன் எப்போதும் நல்ல உறவு கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில், பைடன் நாட்டுக்கு குழப்பம் ஏற்படுத்துவதாகவும் […]
கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் 7.5 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கவலை எழுந்துள்ளது. பொதுவாக, அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பூமியின் மேற்பரப்பை தாக்கும் முன் ஆற்றல் குறைந்து விடும். ஆனால், மேற்பரப்பு பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக ஆற்றலுடன் தாக்கி கட்டிடங்கள் மற்றும் மக்களுக்கு […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.