வெப்ப அலையில் சிக்கியுள்ள பீகார், உ.பி.க்கு உதவ மத்தியக்குழு விரைவு

வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ள பீகார், உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு உதவ மத்தியக்குழு சென்றுள்ளது. வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால் பல்வேறு வெப்ப நோய்களின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படுகிற உடல்நல பாதிப்புகளை சந்திக்க உதவுவதற்காகவும் பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் […]

வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ள பீகார், உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு உதவ மத்தியக்குழு சென்றுள்ளது.

வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால் பல்வேறு வெப்ப நோய்களின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படுகிற உடல்நல பாதிப்புகளை சந்திக்க உதவுவதற்காகவும் பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu