இஸ்ரேல் போர் - மத்திய அரசு உதவி எண்கள் அறிவிப்பு

August 3, 2024

இஸ்ரேலில் வாழும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்கள் வழங்கியது. ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் போருக்கு தயாராகி வருகிறது. இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை அழிக்க லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதையடுத்து லெபனானில் இருந்து இஸ்ரேல் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நகரின் டெல் அவீவ் பகுதிக்கு […]

இஸ்ரேலில் வாழும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்கள் வழங்கியது.

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் போருக்கு தயாராகி வருகிறது. இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை அழிக்க லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதையடுத்து லெபனானில் இருந்து இஸ்ரேல் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நகரின் டெல் அவீவ் பகுதிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக டெல் அவிவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் தூதராக அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் தேவையின்றி நகரத்தை விட்டு வெளியூர் பயணம் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் அங்குள்ள சூழலை இந்திய தூதரகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர். அதோடு தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளாத இந்தியர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறி அவசர உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu