மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. சுமார் 17000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருட தொடக்கம் முதல் 1.15 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அக்டோபர் மாதம் வரை வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 72,147 கோடி ரூபாய் மட்டுமே ஆகும். எனவே, 43515 கோடி ரூபாயை மத்திய அரசு தனது நிதியிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.