பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமீப காலமாக, பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கருப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது. குறிப்பாக கருப்பை வாய் தொற்று ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்தால் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கருப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, தடுப்பூசிக்கான சோதனைகள் செப்டம்பர் 2018-ம் ஆண்டு இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த தடுப்பூசியின் மூலம் எதிர்காலங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பெண்கள் காக்கப்படலாம்.