தமிழகத்தில் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், இன்று முதல் வியாழக்கிழமை வரை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.