தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர், பரமத்தி, தர்மபுரி, நாமக்கல் மதுரை விமான நிலையம், திருத்தணி, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.