நிலவின் அதிர்வுகளை பதிவு செய்தது விக்ரம் லேண்டர் - இஸ்ரோ

September 1, 2023

விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ என்ற கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து அனுப்பியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் கடந்த 23ஆம் தேதி சந்திராயன் 3- இன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதற்கு பின்னர், லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து முதல் கட்டமாக ஆக்சிஜன், சல்பர் போன்ற போன்றவை இருப்பதாக செய்தி அனுப்பி இருந்தது. […]

விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ என்ற கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து அனுப்பியுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் கடந்த 23ஆம் தேதி சந்திராயன் 3- இன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதற்கு பின்னர், லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து முதல் கட்டமாக ஆக்சிஜன், சல்பர் போன்ற போன்றவை இருப்பதாக செய்தி அனுப்பி இருந்தது. தற்போது நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பத்து சென்சார் கருவிகள் லேண்டரில் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ என்ற கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விக்ரம் வேந்தர் மற்றும் பிரக்யான் ரோவர் ஒன்றை ஒன்று படம்பிடித்து அனுப்பியுள்ளது. மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் (MEMS) தொழில்நுட்ப அடிப்படையிலான அந்த கருவி, பிரக்யான் லேண்டர் மற்றும் பிற பேலோடுகளின் இயக்கங்கள் காரணமாக ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu