சந்திரயான் 3 திட்டத்துக்கு அமெரிக்காவில் உயரிய விருது

கடந்த ஆண்டு, இந்தியாவின் சந்திரயான் 3 விண்வெளித் திட்டம், விண்வெளி துறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த திட்டத்தின் வெற்றி இஸ்ரோவுக்கு அதிக விருதுகளை பெற்று தந்து வருகிறது. அந்த வரிசையில், புதிதாக, மற்றொரு விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை சந்திரயான் 3 கொண்டுள்ளது. அதற்காக, விண்வெளித் துறையில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஜான் எல்.'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் […]

கடந்த ஆண்டு, இந்தியாவின் சந்திரயான் 3 விண்வெளித் திட்டம், விண்வெளி துறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த திட்டத்தின் வெற்றி இஸ்ரோவுக்கு அதிக விருதுகளை பெற்று தந்து வருகிறது. அந்த வரிசையில், புதிதாக, மற்றொரு விருது அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை சந்திரயான் 3 கொண்டுள்ளது. அதற்காக, விண்வெளித் துறையில் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஜான் எல்.'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது, சந்திரயான் 3 திட்ட குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலரோடா பகுதியில் நடைபெற்ற வருடாந்திர விண்வெளி கருத்தரங்கத்தில் இது வழங்கப்பட்டது. இஸ்ரோ சார்பில், ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி சி மஞ்சுநாத் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu