தாம்பரம் பணிமனை மேம்பாடு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி - பகத் கி கோத்தி, காரைக்கால் - லோக்மான்ய திலக் உள்ளிட்ட 10 ரயில்கள் தாம்பரம் […]

தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி - பகத் கி கோத்தி, காரைக்கால் - லோக்மான்ய திலக் உள்ளிட்ட 10 ரயில்கள் தாம்பரம் வழியாக தாம்பரம் வழியாக இயக்கப்படுவதற்கு மாறாக அரக்கோணம் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் பல்லவன் விரைவு ரயில், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu