இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வீராங்கனைகளின் போராட்டத்திற்கு, ஜூன் 15ஆம் தேதிக்குள் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
குற்ற பத்திரிக்கையின் படி, அவருக்கு எதிராக 25 பேர் வாக்குமூலம் தந்துள்ளனர். அதே வேளையில், சிறுமி மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால், அவர் மீதான போக்சோ வழக்கை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, பூஷனின் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.