சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து - பயணிகள் காயம்

January 10, 2024

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், 5 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று மாலை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய சார்மினார் விரைவு ரயில், கடைசி நிறுத்தமான ஹைதராபாத் நம்பள்ளி வரையில் எந்த இடையூறும் இன்றி சென்றது. இறுதியாக, ரயில் நிலையத்தில், குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்க தவறியது. எதிரில் இருந்த சுவற்றில் மோதி, ரயிலின் 3 பெட்டிகள் […]

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், 5 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நேற்று மாலை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய சார்மினார் விரைவு ரயில், கடைசி நிறுத்தமான ஹைதராபாத் நம்பள்ளி வரையில் எந்த இடையூறும் இன்றி சென்றது. இறுதியாக, ரயில் நிலையத்தில், குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்க தவறியது. எதிரில் இருந்த சுவற்றில் மோதி, ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ரயில் படிக்கட்டு அருகே இருந்த 5 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, நம்பள்ளி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் இருக்கும். சில ரயில்கள் தாமதமாகவும், சில ரயில்கள் வேறு மார்க்கமாகவும் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu