ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஏற்படுத்த ஓபன் ஏஐ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்டு கைபேசிகளில் எளிமையாக பயன்படுத்த முடிகிறது. இதுவே ஐபோன் சாதனத்தில் பயன்படுத்த முடியாது. இதனை ஏற்படுத்துவதற்காக ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஓ எஸ் 18 இயங்குதளத்தில் சாட் ஜிபிடி அம்சங்கள் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட்பாட்டை ஐபோனில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், ஓபன் ஏஐ உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக புதிய செய்தி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.