இத்தாலியில் மீண்டும் சாட் ஜிபிடி க்கு அனுமதி

April 29, 2023

கடந்த மாதம், இத்தாலி நாட்டில் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டின் தரவுகள் பாதுகாப்பு அமைப்பான Garante, தேசிய பாதுகாப்பு நலன் கருதி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு தடை விதித்தது. மேலும், இந்த தடை தற்காலிகமானது எனவும், ஓபன் ஏஐ நிறுவனத்திடம் இருந்து உரிய விளக்கங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், தடை நீக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதற்காக, நாளை வரையில் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் […]

கடந்த மாதம், இத்தாலி நாட்டில் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டின் தரவுகள் பாதுகாப்பு அமைப்பான Garante, தேசிய பாதுகாப்பு நலன் கருதி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்திற்கு தடை விதித்தது. மேலும், இந்த தடை தற்காலிகமானது எனவும், ஓபன் ஏஐ நிறுவனத்திடம் இருந்து உரிய விளக்கங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், தடை நீக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. இதற்காக, நாளை வரையில் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை, இத்தாலி எழுப்பி இருந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் திருப்திகரமாக அமைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், சாட் ஜிபிடி -ஐ பயன்படுத்த 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். ஆனால், ஓபன் ஏஐ நிறுவனம் இது போன்ற எந்த கட்டுப்பாடையும் வைத்திருக்கவில்லை” என்று இத்தாலி குற்றம் சாட்டியதற்கு, புதிய கருவி மூலம் பயனரின் வயது சரிபார்க்கப்படும் என்று ஓபன் ஏஐ உறுதி அளித்துள்ளது. எனவே, இத்தாலியில் மீண்டும் சாட் ஜிபிடி க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu