சாட் ஜிபிடி இணைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டன்ட் - வோல்க்ஸ்வேகன் கார்களில் அறிமுகம்

January 11, 2024

முதல்முறையாக, வோல்க்ஸ்வேகன் கார்களில் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் இணைக்கப்படுகிறது. கார்களில் உள்ள வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியில் சாட் ஜிபிடி இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் வேகாசில் நடைபெற்ற சிஇஎஸ் மின்னணு வர்த்தக மாநாட்டில், வோல்க்ஸ்வேகன் நிறுவனம், சாட் ஜிபிடி இணைக்கப்பட்ட கார்களை வெளியிட்டது. இந்த கார்கள், அடுத்த சில மாதங்களில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் படி, காரில் பயணிப்பவர்கள், தங்கள் இருக்கைகளை தாங்களாக வசதிக்கு ஏற்ப மாற்ற வேண்டியது […]

முதல்முறையாக, வோல்க்ஸ்வேகன் கார்களில் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் இணைக்கப்படுகிறது. கார்களில் உள்ள வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியில் சாட் ஜிபிடி இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் வேகாசில் நடைபெற்ற சிஇஎஸ் மின்னணு வர்த்தக மாநாட்டில், வோல்க்ஸ்வேகன் நிறுவனம், சாட் ஜிபிடி இணைக்கப்பட்ட கார்களை வெளியிட்டது. இந்த கார்கள், அடுத்த சில மாதங்களில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் படி, காரில் பயணிப்பவர்கள், தங்கள் இருக்கைகளை தாங்களாக வசதிக்கு ஏற்ப மாற்ற வேண்டியது இல்லை. அவர்கள் கட்டளையிட்டால், இருக்கைகள் மாற்றி அமைத்து தரப்படும். வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியில் சாட் ஜிபிடி இணைக்கப்பட்ட பயன் இதுவாகும். இதுபோலவே, பல்வேறு பயன்களை வாகன ஓட்டிகள் அனுபவிக்கலாம்” - இவ்வாறு இந்த கார் குறித்து வர்த்தக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu