செங்டு ஓபன் டென்னிஸில் இந்திய வீரர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றுவருகிறது, இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ் மற்றும் குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது. அதில், பாம்ப்ரி மற்றும் ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்றது. இதன்மூலம் அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், பாம்ப்ரி ஜோடி பிரான்சின் சாடியோ டொம்பியா மற்றும் பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொள்கிறது,