சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஒரு நாள் ரத்து

January 8, 2024

சென்னையில் கன மழை காரணமாக புத்தக கண்காட்சி இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3ம் தேதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புத்தக கண்காட்சி ஆனது 21ஆம் தேதி வரை வேலை நாட்கள் மதியம் 2 மணி முதல் இரவு 8:30 மணி […]

சென்னையில் கன மழை காரணமாக புத்தக கண்காட்சி இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3ம் தேதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புத்தக கண்காட்சி ஆனது 21ஆம் தேதி வரை வேலை நாட்கள் மதியம் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், விடுமுறை நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.மேலும் இதற்காக அங்கு சுமார் 1000 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று கனமழை காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என இன்று ஒரு நாள் மட்டும் புத்தக கண்காட்சிக்கு சென்னையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் புத்தகம் கண்காட்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu