சென்னை - லண்டன் விமான சேவை ஒரு வாரம் நிறுத்தம்

September 1, 2023

சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்லும் ஏர்வேஸ் விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு வாரத்திற்கு இயக்கப்படாமல் உள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை இயக்குகிறது. இது தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும். இவை நேரடி விமான சேவையாக இருப்பதால் சென்னை லண்டன் தினசரி விமானத்தில் பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு […]

சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்லும் ஏர்வேஸ் விமான சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு வாரத்திற்கு இயக்கப்படாமல் உள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை இயக்குகிறது. இது தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும்.

இவை நேரடி விமான சேவையாக இருப்பதால் சென்னை லண்டன் தினசரி விமானத்தில் பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். இதன் மூலம் பயணிகள் லண்டன் சென்று அங்கிருந்து ஸ்காட்லாந்து, பிரேசில், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் மூலம் பயணித்தனர். இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒரு வாரமாக இயக்கப்படாத நிலையில் உள்ளது.இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் தற்போது துபாய்,கத்தார், அபுதாபி, பிராங்க் பார்ட் வழியில் லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu