சென்னை நாகர்கோவில் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க முடிவு

சென்னை நாகர்கோவில் இடையே இயங்கி வரும் வாராந்திர வந்தே பாரத் ரயிலை தினசரி ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை நான்கு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் இடம் கிடைப்பதில்லை. பண்டிகை தினங்களில் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காணப்பட்டு வருகிறது. மேலும் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் திருநெல்வேலி - எழும்பூர் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை நாகர்கோவில் வரை […]

சென்னை நாகர்கோவில் இடையே இயங்கி வரும் வாராந்திர வந்தே பாரத் ரயிலை தினசரி ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை நான்கு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் இடம் கிடைப்பதில்லை. பண்டிகை தினங்களில் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காணப்பட்டு வருகிறது. மேலும் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் திருநெல்வேலி - எழும்பூர் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் சென்னையிலிருந்து நாகர்கோவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலானது தினசரி ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை தற்போது தயாராகி வருகிறது. மேலும் டிக்கெட் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எழும்பூரில் இருந்து காலை புறப்பட்டு நாகர்கோவிலுக்கு சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்குள் சென்னை வந்து சேருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu