சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயில் இயக்க ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை-நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரெயில் இயக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் வகையில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய இணை […]

சென்னை-நெல்லை இடையே 'வந்தே பாரத்' ரெயில் இயக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் வகையில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய இணை மந்திரி முருகன் கூறுகையில், இந்த வருடத்திற்குள் சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிறுத்துவதற்கான பிட்லைன் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu