சென்னையில் பொதுமக்கள் செல்லும் வழியில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் நடைபாதை பிளாசா அமைக்க முடிவு செய்து உள்ளது.
சென்னையில் 13 இடங்களில் உலக வங்கி நிதி உதவி உடன் சென்னை தியாகராய நகரில் உள்ள நடைபாதை பிளாசா போன்ற நெடுஞ்சாலை நடைபாதை பிளாசா அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பழைய வண்ணாரப்பேட்டை முதல் புதிய வண்ணாரப்பேட்டை வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபாதை பிளாசா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாலை பஜார், ரத்தன் பஜார், சாலை அண்ணா நகர் 3வது அவென்யூ, கீழ்பாக்கம் கார்டன், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-கதீரட்ரல் ரோடு, எல்டாம்ஸ் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு கால்வாய் வங்கி சாலை, மேற்கு கால்வாய் வங்கி சாலை,தாலுக்கா அலுவலக சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை சாஸ்திரி நகர் போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவை மொத்தம் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைகின்றது. இந்த பாதையில் நடந்து செல்வதற்கு, சைக்கிளில் செல்ல தனி வழி, பார்க்கிங் வசதி, சில இடங்களில் இருவழி வண்டி பாதை ஆகியவற்றை உள்ளடக்கி நடைபாதை பிளாசாக்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. பொதுமக்களின் பல்வேறு பயன்பாட்டிற்காக இந்த பிளாசா உருவாக்கப்பட இருக்கிறது. மேலும் இங்கு வண்டியை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.