சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்

September 4, 2023

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தற்போது 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 26 க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளன. இதில் தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, மற்றும் காசுக்கோடு - திருவனந்தபுரம் இடையே தலா ஒரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் […]

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை நவம்பரில் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது 33 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 26 க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளன.
இதில் தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, மற்றும் காசுக்கோடு - திருவனந்தபுரம் இடையே தலா ஒரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் - நெல்லை, சென்னை- திருப்பதி இடையே ரயில்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே வாரியம் 31,32,33 வது வந்தே பாரத் ரயில்களை இவற்றிற்கு இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்கள் மணிக்கு 138 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க வேண்டும். தற்போது சென்னை எழும்பூர் - நெல்லை வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்க தேவையான பணிகள் விரைவில் முடியும் நிலையில் உள்ளன. இந்த சேவை நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu