45-வது செஸ் ஒலிம்பியாட் புடாபெஸ்டில் தொடங்கியது. இதில் இந்திய அணிகள் முதல் சுற்றில் வெற்றி பெற்றன.
45-வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஆரம்பமாகியது. இதில், ஓபன் பிரிவில் 197 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 184 அணிகள் பங்கேற்கின்றன. முதல் சுற்றில், இந்திய ஆண்கள் அணி மொராக்கோவை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் பங்கேற்று, மொராக்கோவின் டிசிர் முகமதுவை தோற்கடித்தார். பெண்கள் பிரிவில், இந்தியா ஜமைக்காவை சந்தித்து வெற்றி பெற்றது. ஒவ்வொரு அணியும் 11 சுற்றுகளாகப் போட்டியில் கலந்துகொண்டு, அதிக புள்ளிகளைப் பெறும் அணி தங்கப்பதக்கத்தை வெல்லும்.