டிசம்பர் 5ஆம் தேதி நடக்க வி௫க்கும் ஜி -20 மாநாடு குறித்த ஆலோசனைக் ௯ட்டத்தில் கலந்துகொள்ள டிசம்பர் 4ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
2023-இல் நடக்க உள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 4ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமரை சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனிப்பட்ட முறையிலும் முதல்வர் பிரதமர் மோடியை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.