திருக்குவளைப் பள்ளியில் நாளை காலை உணவு விரிவாக்க திட்டம் தொடக்கம்

August 24, 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் நாளை காலை 8.15 மணிக்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1545 தொடக்கப் பள்ளிகளில், ரூபாய் 33.56 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் காலை உணவாக […]

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் நாளை காலை 8.15 மணிக்கு முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1545 தொடக்கப் பள்ளிகளில், ரூபாய் 33.56 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் காலை உணவாக உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.15 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்ததை தொடர்ந்து இந்த திட்டத்தை விரிவாக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரம் அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த முடிவு எடுத்துள்ளனர். இதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க திட்டத்தை நாளை திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu