எத்தியோப்பியாவில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 229

July 24, 2024

எத்தியோப்பியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 229 பேர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சாச்சா கோஷ்டி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் புதையுண்டன. அப்பொழுது மண்ணில் புதையுண்டவர்களை மீட்க அவர்கள் உறவினர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அப்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மண்ணில் புதையுண்டனர். இதையடுத்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். […]

எத்தியோப்பியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 229 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சாச்சா கோஷ்டி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் புதையுண்டன. அப்பொழுது மண்ணில் புதையுண்டவர்களை மீட்க அவர்கள் உறவினர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அப்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மண்ணில் புதையுண்டனர். இதையடுத்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது. சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பலியானோருக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது இரங்கல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu