டெல்லி அரசின் ஆசா கிரண் காப்பகத்தில் கடந்த 20 நாளில் 27 பேர் மர்ம முறையில் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி அரசின் ஆசா கிரண் காப்பகத்தில் கடந்த 20 நாட்களில் 14 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை 15 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. காப்பகத்தில் ஏற்பட்ட கவனக்குறைவு மற்றும் நிர்வாகப் பிழையே இந்த சோக சம்பவத்திற்கு காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை முடிவுகள் வெளியான பின்னரே உண்மை நிலவரம் தெளிவாகும்.