சொகுசு கப்பலில் சீனா செல்பவருக்கு இலவச விசா

May 16, 2024

சீனாவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் சீனாவின் பொருளாதார மிகவும் மந்தமானது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் மேலும் மோசமானது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சொகுசு கப்பல்கள் மூலம் சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக […]

சீனாவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு பின் சீனாவின் பொருளாதார மிகவும் மந்தமானது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் மேலும் மோசமானது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சொகுசு கப்பல்கள் மூலம் சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து புதிய சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சீனாவின் துறைமுக நகரான ஷாங்காய் உட்பட 13 நகரங்கள் வழியாக வரும் பயணிகளுக்கு இலவச விசா அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் துறைமுக நகரான ஷாங்காய் உட்பட 13 நகரங்கள் வழியாக வரும் பயணிகளுக்கு இலவச விசா அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சீனாவில் 15 நாட்களுக்கு மேல் தங்க முடியாது. அவர்கள் சீனாவில் இருக்கும் போது நகராட்சிகள் மற்றும் தன்னாட்சி பகுதிகள் மற்றும் பீஜிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu