சீனாவில் Intel மற்றும் Amd மென்பொருட்களுக்கு தடை

March 26, 2024

சீன அரசு அலுவலகங்களில் கணினி மற்றும் சர்வர்களில் இன்டெல் மற்றும் ஏஎம்டி சிப்களின் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலின்படி சீன அரசு கணினிகளில் இன்டெல் அல்லது ஏஎம்டி செயலிகள் இடம்பெறாது. அதற்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி மற்றும் சிப்களை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது. முன்னதாக சீனாவின் மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இப்போது இதற்கு பதிலடி தரும் விதமாக சீனா இந்த முடிவை […]

சீன அரசு அலுவலகங்களில் கணினி மற்றும் சர்வர்களில் இன்டெல் மற்றும் ஏஎம்டி சிப்களின் பயன்பாட்டை தடுக்கும் விதமாக புதிய விதிகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதலின்படி சீன அரசு கணினிகளில் இன்டெல் அல்லது ஏஎம்டி செயலிகள் இடம்பெறாது. அதற்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்பு செயலி மற்றும் சிப்களை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளது. முன்னதாக சீனாவின் மென்பொருள் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இப்போது இதற்கு பதிலடி தரும் விதமாக சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. சீனா தனது சொந்த தயாரிப்பு மென்பொருளை பயன்படுத்தினால் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் தரவுதள மென்பொருட்கள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். இதன் மூலம் சீனாவின் உள்நாட்டு மென் பொருட்கள் உபயோகம் வளர்ச்சி அடையும். அதோடு உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பான பிராசஸர்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம்களையே சீன அரசு துறை நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு தொழில் நுட்பங்களை சார்ந்து இருப்பதை தவிர்க்க இயலும். அதோடு சீனாவின் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu