மறுபயன்பாட்டு ராக்கெட்டை சோதனை செய்தது சீன நிறுவனம்

சீனாவின் விண்வெளி நிறுவனமான CAS Space தனது மறுபயன்பாட்டு ராக்கெட்டான Kinetica-2 ஐ அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் முதல் நிலை மற்றும் பூஸ்டர்களை முழுமையாக மீட்டு மறு பயன்பாடு செய்யும் நோக்கம் கொண்டுள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டின் துணை எஞ்சின் அமைப்பின் அதிர்வு மற்றும் வெப்பநிலை சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. சீன அறிவியல் அகாடமியின் துணை நிறுவனமான CAS Space, சீனாவின் செயற்கைகோள் மெகா தொகுப்புகள் மற்றும் டியாங்காங் விண்வெளி […]

சீனாவின் விண்வெளி நிறுவனமான CAS Space தனது மறுபயன்பாட்டு ராக்கெட்டான Kinetica-2 ஐ அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் முதல் நிலை மற்றும் பூஸ்டர்களை முழுமையாக மீட்டு மறு பயன்பாடு செய்யும் நோக்கம் கொண்டுள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டின் துணை எஞ்சின் அமைப்பின் அதிர்வு மற்றும் வெப்பநிலை சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

சீன அறிவியல் அகாடமியின் துணை நிறுவனமான CAS Space, சீனாவின் செயற்கைகோள் மெகா தொகுப்புகள் மற்றும் டியாங்காங் விண்வெளி நிலையத்தை ஆதரிப்பதோடு, துணை சுற்றுப்பாதை சுற்றுலாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் வடிவமைத்துள்ள மறுபயன்பாட்டு ராக்கெட், 174 அடி உயரமும் 11 அடி அகலமும் கொண்டது. கெரோசின் மற்றும் திரவ ஆக்சிஜன் மூலம் இயக்கப்படும் இந்த ராக்கெட், சூரிய சமச்சீரான சுற்றுப்பாதையில் 7,800 கிலோகிராம் எடையுள்ள பொருளையும், குறைந்த பூமி சுற்றுப்பாதையில் 12,000 கிலோகிராம் எடையுள்ள பொருளையும் கொண்டு செல்லும் திறன் வாய்ந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu