பாகிஸ்தானில் சீன குடிமக்கள் மீது தாக்குதல் - கடும் கண்டனம் தெரிவித்தது சீனா

August 14, 2023

பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் திட்டம் தான் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இத்திட்டத்திற்கு சீன தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பகுதியில் சீன அரசாங்கம் செய்யும் முதலீடு அங்குள்ள மக்களுக்கு எந்த பயனும் அளிக்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி […]

பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் திட்டம் தான் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இத்திட்டத்திற்கு சீன தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பகுதியில் சீன அரசாங்கம் செய்யும் முதலீடு அங்குள்ள மக்களுக்கு எந்த பயனும் அளிக்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் துறைமுகத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த சீன பொறியாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சீன பொறியாளர்கள் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. மேலும் அவர்கள் இது போன்ற தாக்குதலை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை சீனா கடுமையாக கண்டித்ததுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை எச்சரித்தது. மேலும், இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. அதோடு பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் உடைமைகளை பாதுகாக்கவும் அறிவுறுத்தியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu