சீனா தனது 144 மணி நேர விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை 37 நுழைவுத் துறைமுகங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
சுமார் 53 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பயணிகள் விசா இல்லாமல் ஆறு நாட்கள் வரை நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கிறது. இந்தக் கொள்கை, சுற்றுலா மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் தகுதியான பயணிகள், முக்கிய விமான நிலையங்கள் மற்றும் கடல் துறைமுகங்கள் உட்பட நியமிக்கப்பட்ட துறைமுகங்கள் வழியாக சீனாவிற்குள் நுழையலாம்.. மேலும் அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்லலாம். இந்த விரிவாக்கத்தில் குவாங்டாங், ஹுனான் மற்றும் ஹூபே போன்ற மாகாணங்களில் புதிய துறைமுகங்கள் உள்ளன. இந்தக் கொள்கையானது 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஏற்கனவே 400,000 விசா இல்லாத நுழைவுகளை எளிதாக்கியுள்ளது. இது கலாச்சார பரிமாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.