ஹங்கேரி பிரதமர் சீனாவுக்கு பயணம்

July 9, 2024

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் முன்பு இதுபோல் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த முயற்சியின் அடுத்த கட்டமாக இப்பொழுது சீனா வந்துள்ளார். இந்த மாதம் ஐரோப்பிய யூனியன் தலைமை பொறுப்பை ஹங்கேரி ஏற்றது. இது நேடோவிலும் ஐரோப்பிய […]

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் முன்பு இதுபோல் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த முயற்சியின் அடுத்த கட்டமாக இப்பொழுது சீனா வந்துள்ளார். இந்த மாதம் ஐரோப்பிய யூனியன் தலைமை பொறுப்பை ஹங்கேரி ஏற்றது. இது நேடோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் அங்கம் வகிக்கிறது. இதன் காரணமாகவே உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் இது குறித்து கூறியிருப்பதாவது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த சீனாவால் முடியும். எனவே அந்நாட்டு அதிபர் ஜிங் பிங்கை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இங்கு வந்துள்ளேன். இந்த சந்திப்புக்கு பின் சீன அதிபர் ஜிங்பிங் அறிக்கை வெளியிட்டார். அதில் உக்கரைனும் ரஷ்யாவும் மீண்டும் நேரடி அமைதி பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும். இதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விக்டர் ஆர்பன் ரஷ்ய அதிபர் புதின் ஆதரவாளர் ஆவார். கடந்த இரண்டாம் தேதி அவர் உக்ரைன் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜெனரன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து ஐந்தாம் தேதி ரஷ்யாவுக்கு சென்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவருடைய இந்த ரஷ்ய பயணத்திற்கு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu