கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25% வரியும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரியும் விதிக்கப்படுகிறது. டிரம்பின் வரி உத்தரவுக்கு பதிலடியாக சீன அரசும் புதிய வரி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு மீது […]

கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25% வரியும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரியும் விதிக்கப்படுகிறது.

டிரம்பின் வரி உத்தரவுக்கு பதிலடியாக சீன அரசும் புதிய வரி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு மீது 15% வரியும், கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், குறிப்பிட்ட ரக கார்கள் மீது 10% வரியும் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu