சீனாவின் புதிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது

புவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிய செயற்கைக்கோள் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்- 4சி ராக்கெட் மூலம் கோபேன்-12 04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கைக்கோள் அதன் திட்டமிட்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது, புவி கண்காணிப்பு பணியை முதன்மையாக மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நில அளவீடு, விலைப் பொருட்கள் மதிப்பீடு, நகர்ப்புற வளர்ச்சி தீர்மானம் […]

புவி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிய செயற்கைக்கோள் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்- 4சி ராக்கெட் மூலம் கோபேன்-12 04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கைக்கோள் அதன் திட்டமிட்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது, புவி கண்காணிப்பு பணியை முதன்மையாக மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நில அளவீடு, விலைப் பொருட்கள் மதிப்பீடு, நகர்ப்புற வளர்ச்சி தீர்மானம் போன்ற பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் தரவுகள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், காலநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளுக்கும் செயற்கைக்கோள் தரவுகள் துணை புரியும் என சீனா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu